அதிகாரிகளை அலைக்கழித்த கர்ப்பிணி அரசு மருத்துவமனையில் அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகளை அலைக்கழித்த கர்ப்பிணி அரசு மருத்துவமனையில் அனுமதி

Added : ஜூலை 25, 2020
Share

இடைப்பாடி: தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி, அதிகாரிகளை அலைக்கழிக்கச்செய்து, பின், அவரே, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.


கொங்கணாபுரம், எட்டிக்குட்டைமேட்டைச் சேர்ந்த, கூலித்தொழிலாளியின் மனைவி, 25 வயதுடைய கர்ப்பிணி. இவர், மாத பரிசோதனைக்கு, வெள்ளாளபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, மூன்று நாளுக்கு முன் சென்றார். பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது, நேற்று உறுதியானது. சுகாதாரத்துறை அதிகாரிகள், கர்ப்பிணி வீட்டுக்கு சென்றபோது, அவரும், அவரது, 31 வயது கணவரும் வீட்டில் இல்லை. அப்பெண்ணின் கணவரிடம், மொபைல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, இருவரும், இடைப்பாடியில் உள்ள, கர்ப்பிணியின் தாய் வீட்டில் இருப்பதாக கூறினார். நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், அங்கு சென்று பார்த்தபோது, இருவரும் இல்லை. பின், அவரது உறவினர் வீடுகளில், போலீசார், நகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் தேடினர். பின், பூலாம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது, அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனால், அவர்கள், அங்கு செல்லும் முன், கர்ப்பிணி, தன் கணவருடன், மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். இதையறிந்த சுகாதாரத்துறையினர், அப்பெண்ணை, கொரோனா வார்டில் அனுமதிக்க, மேட்டூர் அரசு மருத்துவர்களிடம் அறிவுறுத்தினர். தொடர்ந்து, அப்பெண்ணின் கணவரை தனிமைப்படுத்த, சுகாதாரத்துறையினர் தேடினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X