பொது செய்தி

தமிழ்நாடு

பைத்தூர் ஊராட்சியில் சர்ச்சை: துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

ஆத்தூர்: ஊராட்சி துணைத்தலைவர் மீது, தலைவர், எட்டு வார்டு உறுப்பினர், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர், பைத்தூர் ஊராட்சி தலைவர் கலைச்செல்வி, துணைத்தலைவர் சந்திரசேகர் இடையே, கோஷ்டி பிரச்னை ஏற்பட்டதால், ஒருவர் மீது ஒருவர், கலெக்டர், ஊரக வளர்ச்சி துறைக்கு புகார் அனுப்பினர். கடந்த, 10ல், தலைவர், அ.தி.மு.க.,வில் இணைந்தார். இதையடுத்து, 18ல், தி.மு.க.,வில் இருந்து விலகிய, துணைத்தலைவர், பல்வேறு கட்சிகளில் விலகிய, 10 வார்டு உறுப்பினர், தங்கள் பதவிகளை தக்கவைக்க, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். நேற்று, ஊராட்சி அலுவலகத்தில், தலைவர் கலைச்செல்வி தலைமையில், கூட்டம் நடந்தது. அதில், வார்டு உறுப்பினர்களான, தே.மு.தி.க.,வின் செல்வராணி, அ.தி.மு.க., ராமசாமி, தினகரன், மாதம்மாள், செல்வராஜ், இளங்கோவன், தனலட்சுமி, வனிதா, தலைவர் கலைச்செல்வி ஆகியோர், துணைத்தலைவர் சந்திரசேகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அவருக்கு ஆதரவாக, வார்டு உறுப்பினர்கள் வசந்தி, தமிழ்செல்வி, பிரபாகரன் தீர்மானம் கொண்டு வந்தனர். இத்தீர்மான நகலும், துணைத்தலைவருக்கு வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, தலைவர் கலைச்செல்வி கூறுகையில், ''ஊராட்சி திட்டப்பணிக்கு துணைத்தலைவர் கையெழுத்து போட மறுத்ததால், வார்டு உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்படி கூறியதால் கூட்டம் நடந்தது. எட்டு உறுப்பினர், துணைத்தலைவரை நீக்க கையெழுத்து போட்டுள்ள தபால், பி.டி.ஓ.,விடம் வழங்கப்படும்,'' என்றார்.


ஆத்தூர் பி.டி.ஓ., அருள்பாரதி(ஊராட்சி) கூறியதாவது: துணைத்தலைவர் நீக்கம் உள்ளிட்ட ஊராட்சி கூட்டம் குறித்து, பி.டி.ஓ.,வுக்கு முன் கூட்டியே எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், தகவல் தெரிவிக்கவில்லை. தீர்மான விபரமும் வழங்கவில்லை. ஓராண்டுக்கு பின் தான், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியும். கூட்டம் நடந்தது குறித்து, தலைவரிடம் விளக்கம் கேட்கப்படும். கலெக்டர், ஊரக வளர்ச்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X