சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் 'அபேஸ்'

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

மேட்டூர்: வங்கி மேலாளர் போல், மொபைலில் பேசி, விவசாயி கணக்கில் மர்மநபர், ஒரு லட்சம் ரூபாயை லவட்டிக் கொண்டார்.


மேட்டூர், நவப்பட்டி ஊராட்சி, ஒட்டபாலிக்கரட்டைச் சேர்ந்த, விவசாயி சீனிவாசன், 45; ஒப்பந்த அடிப்படையில், ஆலை கரும்புகளை அறுவடை செய்ய, விவசாயிகளை அழைத்துச்செல்லும் கொத்துக்காரராகவும் உள்ளார். அறுவடை செய்த கரும்புக்கு, கூலியை, தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர், சீனிவாசனின், கொளத்தூர், கனரா வங்கி கணக்கில் செலுத்துவர். அவர், அதை எடுத்து தொழிலாளருக்கு பிரித்து வழங்குவார். இந்நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து, மர்ம நபர், 1 லட்சம் ரூபாய் எடுத்துவிட்டார்.

இதுகுறித்து, சீனிவாசன் கூறியதாவது: கடந்த, 22ல், ஒரு ஆலை நிர்வாகம், என் வங்கி கணக்கில், 1.17 லட்சம் ரூபாய் செலுத்தியது. அதை எடுக்க, வங்கிக்கு புறப்பட்டேன். அப்போது, என் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசியவர், 'கனரா வங்கி மேலாளர் பேசுகிறேன். பிரதமர் மோடியின், விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டத்தில், உங்கள் கணக்கில், 6,000 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. அதனால், உங்கள் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம்., அட்டையின் ரகசிய குறியீடை தரும்படி கேட்டார். மேலாளர்தான் பேசுகிறார் என நினைத்து, கணக்கு எண், ஏ.டி.எம்., அட்டை ரகசிய குறியீடு எண்ணை கூறினேன். உடனே என் கணக்கில் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் எடுக்கப்பட்ட குறுந்தகவல் வந்தது. அதிர்ச்சியடைந்த நான், மீதமுள்ள, 17 ஆயிரம் ரூபாயை எடுத்துவிட்டு, வங்கிக்கு சென்று மேலாளரிடம் பேசினேன். அவர்களோ, 'நீங்கள் ஏன் மொபைலில் பேசிய மர்மநபரிடம், கணக்கு எண்ணை தெரிவித்தீர்கள். நீங்கள் ஏமாந்துவிட்டீர்கள்' எனக்கூறினர். பணத்தை எடுத்தவர் மீது நடவடிக்கை கோரி, போலீசில் புகாரளிக்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X