ஆய்வாளருக்கு கொரோனா; நகராட்சி அலுவலகம் மூடல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆய்வாளருக்கு கொரோனா; நகராட்சி அலுவலகம் மூடல்

Added : ஜூலை 25, 2020
Share

தர்மபுரி: தர்மபுரி நகராட்சி ஆய்வாளர் உள்பட, மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தொற்று எண்ணிக்கை, 540 ஆக உயர்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், தொற்று எண்ணிக்கை, 505ல் இருந்து, 540 ஆக உயர்ந்துள்ளது. இதில், தர்மபுரி அடுத்த வெண்ணாம்பட்டியை சேர்ந்த துப்புரவு ஆய்வாளர் ஆண், 42, நெடுமாறன்நகரரை சேர்ந்த ஆண் மருத்துவ பிரதிநிதி, 29, உள்பட மாவட்டம் முழுவதும், 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X