பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக தொடர் மழை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக, அரூர், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல்லில், அதிகளவில் மழை பெய்து வருகிறது. வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களில், களை எடுத்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக அரூரில், 44 மி.மீ., பாலக்கோடு, 34, பென்னாகரம், 28, பாப்பிரெட்டிப்பட்டி, 18, மாரண்டஹள்ளி, 15, ஒகேனக்கல், 4.6 என மொத்தம், 143.6 மி.மீ., மழை பதிவானது. இது மாவட்டத்தின் சராசரியாக, 20.51 மி.மீ., மேலும், மழை பெய்யும் என்ற நம்பிக்கையில், சில விவசாயிகள் துவரை, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X