குடிபோதையில் தந்தையை அடித்து கொன்ற மகன்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிபோதையில் தந்தையை அடித்து கொன்ற மகன்

Added : ஜூலை 25, 2020
Share

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முனியப்பன், 75, கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி, 20 ஆண்டுகளுக்கு முன், இறந்து விட்டார். இவர்களுக்கு, ஆறு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இவருடைய நான்காவது மகன் வேலன், 45, கூலி தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இவர் குடிபோதையில், அவருடைய தந்தை முனியப்பனை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து, நேற்று காலை தனது சகோதரரிடம் வேலன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவருடைய உறவினர்கள் பென்னாகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார் வேலனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், 'என் மனைவியும், என்னுடைய தந்தையும் இரண்டு ஆண்டாக கள்ளத்தொடர்பில் இருந்தனர். இதை நான் பலமுறை கண்டித்தும், அவர்கள் கேட்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்து, தந்தையை கட்டையால் அடித்து கொன்றதாக' வேலன் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X