ஓசூர்: ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் சசிவெங்கடசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் நாராயணசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆப்தாப்பேகம், ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்கள் ஏழு பேரும், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக, பஞ்.,க்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும், வளர்ச்சி திட்டப் பணிகள் துவக்க விழாவிற்கு, தங்களுக்கு அழைப்பு வருவதில்லை. பஞ்., செயலர்கள், தலைவர்கள், தங்களை பணிகள் செய்ய விடுவதில்லை. ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல், பஞ்., தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வளர்ச்சி பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தி.மு.க., கவுன்சிலர்கள் வளர்ச்சி பணிகளை செய்ய கடிதம் கொடுத்தால், அந்த தீர்மானத்தை கொண்டு வருவதில்லை. பஞ்., செயலர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கடைசியாக பேசிக்கொள்ளலாம் என, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் கூறிய நிலையில், ஏழு கவுன்சிலர்களும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE