கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சாரதா, வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் உள்ளன. 2020-21ம் கல்வியாண்டின், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, இணையதளம் மூலம் வரும் ஆகஸ்ட் வரை விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி மாணவ, மாணவியர் http://www.tngptc.in or https://www.tngptc.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பதிவேற்றும் போதே பதிவு கட்டணமாக, 150 ரூபாயை டெபிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகியவற்றில் செலுத்தலாம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் பதிவு கட்டணம் செலுத்த வேண்டாம். பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மாற்று சான்றிதழ், சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ், விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆகியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும். ஆக., 5 முதல், 16க்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி, பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை மற்றும் அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE