கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு பணிகள் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார். அங்கு பணிபுரியும் டாக்டர்கள், அரசுத்துறை அலுவலர்களிடம், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினார்.
பின்னர், நிருபர்களிடம் கலெக்டர் கூறியதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நபர்கள், தங்களின் அவசர தேவைக்கு கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கோவிட் கேர் சென்டரில், 04343-230042 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு பகுதி என கண்டறியப்பட்டால் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மூலம் பொதுமக்கள் அந்த பகுதியை விட்டுச் செல்லாமல், தடுக்க சோதனை சாவடி அமைக்க வேண்டும். தன்னார்வலர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனைத்து வசதிகளும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் நிலை, இரண்டாம் நிலை தொடர்பாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை தனிமைப்படுத்துதல் பணியை, மேற்கொள்ள வேண்டும் என, அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE