5 குழந்தை உள்பட 92 பேருக்கு கொரோனா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

5 குழந்தை உள்பட 92 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 25, 2020
Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் ஐந்து குழந்தைகள் உள்பட, 92 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை, 653 ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த மே, 3 வரை கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்தது. கடந்த ஜூன், 24 வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 71ஆக இருந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 582 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில், 92 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி சுற்று வட்டாரத்தில், 30 பேர், பர்கூர் பகுதியில், 14, ஓசூரில், 20, சூளகிரியில், ஏழு, போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில் எட்டு, காவேரிப்பட்டணம் பகுதியில் நான்கு, வேப்பனஹள்ளியில் நான்கு என, 69 ஆண்கள், 23 பெண்கள் என்று மாவட்டம் முழுவதும், ஐந்து குழந்தைகள் உள்பட, 92 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 653ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X