சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் சாவில் மர்மம்: எஸ்.பி.,யிடம் மனைவி மனு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கணவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, இறந்தவரின் மனைவியான ஜமுனா, 31, கிருஷ்ணகிரி எஸ்.பி., பண்டிகங்காதரிடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம், கோடிப்பள்ளி அருகே சீலேப்பள்ளியை சேர்ந்தவர் முருகேசன், 38. இவர், ஓசூரில் நகை தயாரிக்கும் நிறுவனத்தில், (சிப்காட், டைட்டான் ஜூவல்லரி) சமையலராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த, 16ல் வேலைக்கு சென்றுள்ளார். அன்று, உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக, எனக்கு நிறுவனத்தினர் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு சென்று பார்த்த போது, அவர் இறந்துவிட்டதாக தெரியவந்தது. அத்துடன் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், இங்கேயே உடலை எரித்து விடுவதாகவும், என்னிடம் சமாதானம் பேசி கையெழுத்து பெற்று, உரிய இழப்பீடு வழங்குவதாக கூறி, அவசர அவசரமாக கணவர் உடலை எரித்துவிட்டனர். அதன் பின்னர் தான், அவர் கொரோனாவால் இறக்கவில்லை. சமையல் செய்யும் போது, மின்சாரம் தாக்கி இறந்துள்ளார் என, தெரியவந்தது. என் கணவர் சாவிற்கு காரணம், அந்த தனியார் நிறுவனத்தின் அஜாக்கிரதைதான். இது குறித்து, நேர்மையான போலீசை வைத்து விசாரணை நடத்த வேண்டும். அல்லது சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X