சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓசூர் அருகே தொழிலாளி வெட்டி கொலை: கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கொரோனா

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

ஓசூர்: பாகலூர் அருகே, தொழிலாளியை கொலை செய்த வழக்கில். கைது செய்யப்பட்ட வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பார்த்தகுமார், 26; கூலித்தொழிலாளி; கடந்த, 18 காலை, 11:00 மணிக்கு டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில், பாகலூரில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த அவரை, காளேஸ்வரம் பஸ் நிறுத்தம் அருகே வழிமறித்த மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. விசாரணையில், இனப்பசந்திரம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 35, என்பவருக்கும், பார்த்தகுமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததால், கொலை நடந்தது தெரிந்தது. இதையடுத்து, பாகலூர் கோட்டையை சேர்ந்த, 25 வயது வாலிபர், அதே பகுதியை சேர்ந்த ஒன்னராஜ், 23, கந்தாரு முனியப்பா, 37, கோபாலகிருஷ்ணனின் தம்பி சம்பத்குமார், 31, ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். முதல் குற்றவாளியான கோபாலகிருஷ்ணன், ஓசூர் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஐந்து பேரையும் சிறையில் அடைக்கும் முன், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 25 வயது குற்றவாளிக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அவர், ஓசூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற நான்கு பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் பாகலூர் ஸ்டேஷன், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. நேற்று, ஸ்டேஷனில் வழக்கமான பணிகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X