பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் மாவட்டத்தில் 170 பேர் பாதிப்பு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நேற்று, 170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். வேலூர் சத்துவாச்சாரியில் ஆறு பேர், காட்பாடி, 14, ரங்காபுரம், சேண்பாக்கம், தோட்டப்பாளையம், கஸ்பா, போலீஸ் குடியிருப்பு, தாராபடவேடு, விருதம்பட்டு மற்றும் குடியாத்தத்தில், 20, பேர்ணாம்பட்டில், 21 பேர் என மாவட்டம் முழுவதும் நேற்று, 170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அனைவரும் வேலூர், குடியாத்தம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 4,812 ஆக உயர்ந்துள்ளது. வேலூர் மாநகராட்சி பகுதிகளில் மட்டும், பரவி வந்த கொரோனா, கிராமப்பகுதிகளிலும் வேகமெடுத்துள்ளது. குடியாத்தம், பேர்ணாம்பட்டு, லத்தேரி, கே.வி., குப்பம் ஆகிய பகுதிகளில், 800க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில், 47, திருப்பத்தூர் மாவட்டத்தில், 42 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X