பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு: அசத்தும் 4ம் வகுப்பு மாணவி

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

பெரம்பலூர்: கொரோனா குறித்து, சமூக வலைதளங்களில், 4ம் வகுப்பு மாணவி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
பெரம்பலூர் கிரீன் சிட்டி பகுதியைச் சேர்ந்த, சுசீந்திரன் - தனம் தம்பதியின் மகள், லத்திகாஸ்ரீ, 9; அங்குள்ள மெட்ரிக் பள்ளியில், 4ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலேயே, 1,330 திருக்குறளையும், விளக்கத்துடன் மனப்பாடம் செய்து ஒப்புவித்து, சாதனை படைத்தார். மேலும், பாரதியார் கவிதைகள், 100 வகையான பூக்களின் பெயர்களை, எப்போது கேட்டாலும் சொல்லும் திறமை படைத்தவர். மகளின் திறமையை பார்த்து வியந்த இவரது தாய், தமிழ் மகள் என்ற பெயரில், 'பேஸ்புக், யு டியூப்' சேனல் உருவாக்கினார். இதில், கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டியதன் அவசியம், முக கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவை குறித்து, வீடியோ பதிவுகளை, லத்திகாஸ்ரீ மழலை தமிழில் பதிவிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரது பதிவுகள், இந்தியா மட்டுமல்லாது, மலேஷியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சமூக வலைதள விரும்பிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 10 லட்சம் பேர், இவரது பதிவுகளை கண்டு ரசித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X