பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 7,000 கன அடியாக அதிகரிப்பு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

பென்னாகரம்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று வினாடிக்கு, 7,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து, வெளியேற்றப்படும் உபரி நீர் மற்றும் ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதியான அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால், தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர் ஆணைய கணக்கீட்டுபடி, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 6,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 7,000 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள சினி பால்ஸ், மெயின் அருவி, ஐந்து அருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X