தொ.வே.கூ., வங்கிகளில் கோர் பாங்கிங் வசதி: நபார்டு வங்கி அதிகாரி தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொ.வே.கூ., வங்கிகளில் 'கோர் பாங்கிங்' வசதி: நபார்டு வங்கி அதிகாரி தகவல்

Added : ஜூலை 25, 2020
Share

ஈரோடு: ''அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும், கோர்-பாங்கிங் முறை (ஒருங்கிணைந்த கணினி மயமாக்கி இணைத்தல்) செயல்படுத்தப்பட உள்ளது,'' என, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் அபூர்வராஜன் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது: பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் உறுப்பினர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தற்காலிக கணக்கு துவங்கி, அங்கு கடன் பெறுதல், பணம் எடுத்தல் போன்ற பணிகளை தொடர்ந்தனர். அதுபோல தற்போதும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருப்போர், மத்திய கூட்டுறவு வங்கியில் மட்டும் தற்காலிக கணக்கு வைத்து கடன் பெறலாம். விவசாயிகள் உள்ளிட்ட எவரும் கடன் பெற தடை இல்லை. ஆன்லைனில் விண்ணப்பித்து, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் பெறலாம். இதற்காக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கணினிமயமாக்கி, கோர்-பாங்கிங் முறையில் இணைக்கும் பணி நடக்க உள்ளது. தற்போது, மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட கூட்டுறவு வங்கிகள் கோர்-பாங்கிங் முறையில் இணைத்து, ரிசர்வ் வங்கி விதிப்படி கடன் வழங்கி, முழு கணக்கு விபரமும் ரிசர்வ் வங்கியால் கண்காணிக்கப்படுகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், முன்பு கணக்கு வைத்திருப்பவர்கள் விபரங்கள், ரிசர்வ் வங்கிக்கு நேரடியாக தெரியாது. ஆனால், ஒவ்வொரு குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உறுப்பினர்களின் பரிவர்த்தனைகள் முழுமையாக பதிவேற்றம் செய்து, தெரிந்து கொள்ளப்படும். தவிர, அனைத்து உறுப்பினர்கள், கடன் பெறுவோரின் வங்கி கணக்குடன், அவர்களது ஆதார் கார்டு, பான் கார்டுகளையும் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்கப்படும்போது, அதிக கடன் பெறுபவர், டிபாசிட் செய்வோர், பான் கார் இணைப்பால் வருமான வரி உச்சவரம்புக்குள்ளும் வந்துவிடுகின்றனர். அதன்பின், அங்கும் ஆன்லைனில் கடன் விண்ணப்பம் செய்து, கடன் பெறும் வசதி முழு அளவில் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X