ஈரோட்டில் டீ விற்கும் ஐகோர்ட் வக்கீல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் டீ விற்கும் ஐகோர்ட் வக்கீல்

Added : ஜூலை 25, 2020
Share
ஈரோடு: ஐகோர்ட் வக்கீல், வாழ்வா தாரத்துக்காக, ஈரோட்டில் டீ விற்பனை செய்கிறார்.சென்னை உயர்நீதிமன்றத்தில், வக்கீலாக பணிபுரிபவர் செய்யது ஹாரூன், 69; தற்போது, ஈரோடு, சம்பத் நகரில் சைக்கிளில் டீ விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்றத்தில், 41 ஆண்டாக வக்கீலாக வழக்காடி வருகிறேன். கொரோனா ஊரடங்கு நடவடிக்கையாக, நீதிமன்றங்கள் முழு அளவில்

ஈரோடு: ஐகோர்ட் வக்கீல், வாழ்வா தாரத்துக்காக, ஈரோட்டில் டீ விற்பனை செய்கிறார்.


சென்னை உயர்நீதிமன்றத்தில், வக்கீலாக பணிபுரிபவர் செய்யது ஹாரூன், 69; தற்போது, ஈரோடு, சம்பத் நகரில் சைக்கிளில் டீ விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்றத்தில், 41 ஆண்டாக வக்கீலாக வழக்காடி வருகிறேன். கொரோனா ஊரடங்கு நடவடிக்கையாக, நீதிமன்றங்கள் முழு அளவில் செயல்படவில்லை. இதனால், சொந்த ஊரான ஈரோட்டுக்கு வந்து விட்டேன். ஈரோடு, திருநகர் காலனியில் என் வீடு உள்ளது. எனக்கு வேறு வேலை தெரியாது. வருமானம், வாழ்வாதாரத்துக்கு வழியில்லை. இதனால், டீ விற்பனை செய்கிறேன். நீதிமன்றத்தை விரைவில் திறந்து, முழு அளவிலான செயல்பாட்டை துவங்க வேண்டும். வக்கீல்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும், பணி செய்பவர்களும் கொரோனா ஊரடங்கால், கடுமையாக பாதித்துள்ளனர். ஈரோடு மட்டுமின்றி, சென்னை உட்பட பல இடங்களில், வக்கீல் வேலையை மட்டும் தொழிலாக வைத்திருக்கும் பலர் சிரமப்படுகின்றனர். இது போன்றவர்களுக்கு, அரசு உதவ முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X