பொது செய்தி

தமிழ்நாடு

பலத்த மழையால் கிருஷ்ணகிரி அணைகளுக்கு தண்ணீர் வரத்து கிடுகிடு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர் மழையால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு துவங்கி நேற்று காலை, 5:30 மணி வரை பலத்த மழை பெய்தது. பல பகுதிகளில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக பெனுகொண்டாபுரத்தில், 90.4 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. கிருஷ்ணகிரி, 75.4, நெடுங்கல், 59.2, போச்சம்பள்ளி, 36, சூளகிரி, 27, பாரூர், 24.8, தேன்கனிக்கோட்டை, 14, ஓசூர், 11, ராயக்கோட்டை, 7, ஊத்தங்கரை, 5.6, அஞ்செட்டி, 2 என மொத்தம், 352.4 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. பலத்த மழையால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு வந்து கொண்டிருந்த, 720 கன அடிநீர் அணை பாதுகாப்பு கருதி, ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கே.ஆர்.பி., அணைக்கு வினாடிக்கு, 371 கன அடிநீர் வந்த நிலையில், நேற்று நீர்வரத்து, 658 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து, 469 கன அடிநீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம், 52 அடியில், 31.25 அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X