பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

மேட்டூர்: கர்நாடகா அணைகளின் நீர்திறப்பு சற்று அதிகரிப்பால், மேட்டூர் அணை நீர்வரத்து, வரும் நாளில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தீவிரம் அடைந்த பருவமழையால், கர்நாடகா அணைகளுக்கு தொடர்ச்சியாக நீர் வருகிறது. இதனால், கடந்த, 22ல், வினாடிக்கு, 6,000 கனஅடியாக இருந்த, கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்திறப்பு, நேற்று, 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் வினாடிக்கு, 5,081 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 4,710 கனஅடியாக சரிந்தது. வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி நீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டது. கர்நாடகா அணைகளின் நீர்திறப்பு அதிகரிப்பால், வரும் நாளில், மேட்டூர் அணை நீர்வரத்து சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X