தமிழ்நாடு

தொடர் அங்கீகாரம் வழங்குவதில் அலைக்கழிப்பு; சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் தவிப்பு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

சேலம்: தனியார் பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் வழங்கப்படாமல் இழுத்தடிப்பதால், கட்டண நிர்ணய குழுவுக்கு விண்ணப்பிக்க முடியாமலும், பள்ளி வாகன உரிமங்களை புதுப்பிக்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.


சேலம் மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்ட, நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சுயநிதி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் செயல்படுகின்றன. கடந்த ஆண்டுகளில், மூன்றாண்டுக்கு ஒருமுறை அங்கீகாரம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டிலிருந்து, ஓராண்டுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இதனால், மாவட்டத்திலுள்ள, 80 சதவீதத்துக்கு அதிகமான பள்ளிகளுக்கு, மே, 31ல், அங்கீகாரம் முடிந்துவிட்டது. தொடர் அங்கீகாரம் கேட்டு, இவை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு விண்ணப்பித்துள்ளன. அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அலைக்கழிப்பதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து, தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது: மூன்றாண்டுக்கு பின், கட்டண நிர்ணய குழுவில் விண்ணப்பிக்க, நடப்பாண்டில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, பள்ளி அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், விண்ணப்பித்து மூன்று மாதமான நிலையில், அதன் மீது நடவடிக்கை இல்லை. டி.டி.சி.பி., அப்ரூவல் உள்ள பள்ளிகளுக்கு கூட, அங்கீகாரம் வழங்காமல் அலைக்கழிக்கின்றனர். இதனால், கட்டண நிர்ணய குழுவுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இக்கட்டான சூழலில், இது பள்ளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வாகன உரிமங்களை புதுப்பிக்க சென்றாலும், பள்ளி அங்கீகார சான்று கேட்கின்றனர். விண்ணப்பித்துள்ளோம் எனில், விண்ணப்பம் நிலுவையில் உள்ளது என சான்றிதழ் பெற்று வர, போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர். கல்வி துறையில் தெரிவித்தால், பள்ளியே திறக்கவில்லை. எதற்கு உங்களுக்கு அங்கீகாரம் என கேட்கின்றனர். இதனால், வாகன உரிமங்களை புதுப்பிக்க முடியவில்லை. கல்வியாண்டின் இடையே, வாகன உரிமங்களை புதுப்பித்தாலும், பல்வேறு சிக்கல் உருவாகும். பள்ளி திறக்கும் முன், தகுதியுள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி கூறியதாவது: டி.டி.சி.பி., அப்ரூவல் இல்லாத பள்ளிக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து, அரசு தெளிவுரை வந்த பின்தான் நடவடிக்கை எடுக்க முடியும். மற்றபடி, தொடர் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், ஏதேனும் சான்றுகள் குறையிருப்பின், அதற்காக தாமதம் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X