பள்ளி மாணவி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது| Dinamalar

பள்ளி மாணவி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது

Added : ஜூலை 25, 2020 | |
ஆரணி: ஆரணி அருகே, பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அரியாத்தூரை சேர்ந்த, 16 வயது மாணவி, அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தெற்குமேடு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், 23, கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். ஊரடங்கால், சொந்த ஊரில் தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவி,

ஆரணி: ஆரணி அருகே, பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அரியாத்தூரை சேர்ந்த, 16 வயது மாணவி, அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தெற்குமேடு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், 23, கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். ஊரடங்கால், சொந்த ஊரில் தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவி, அங்குள்ள விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த மணிகண்டன், திடீரென மாணவியை மறைவான இடத்திற்கு இழுத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி, தன் பெற்றோரிடம் தெரிவித்தார். ஆரணி அனைத்து மகளிர் போலீசில், நேற்று மாணவியின் பெற்றோர் அளித்த புகார்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை போக்சோவில் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X