பொது செய்தி

தமிழ்நாடு

வெற்றிலை வயலில் மழைநீர் தேக்கம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கிருஷ்ணராயபுரம்: பிச்சம்பட்டியில், தண்ணீர் தேக்கம் காரணமாக வெற்றிலை கொடிக்கால் சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிச்சம்பட்டியில் வெற்றிலை சாகுபடி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணராயபுரம் பகுதியில், 61 மி.மீ., மாயனூரில், 64 மி.மீ., பஞ்சப்பட்டியில், 15.2 மி.மீ., மழை பெய்தது. இதனால், வெற்றிலை கொடிக்கால் வயலில் மழை நீர் தேங்கியது. புதிய கொடிகள், செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டது. தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த பணியில் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டதால், விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X