பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் தொடர் மழை: க.பரமத்தியில் 90 மி.மீ., பதிவு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் மாவட்டத்தில், நேற்று அதிகாலை வரை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. க.பரமத்தியில் அதிகபட்சமாக, 90 மி.மீ., மழை கொட்டியது.


தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கரூர் உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்யும் என, நேற்று முன்தினம் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு கரூர் நகரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இடியுடன் கூடிய கன மழை நேற்று அதிகாலை வரை விட்டு விட்டு பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழையளவு (மி.மீ.,) கரூர், 51.1, அரவக்குறிச்சி, 27, அணைப்பாளையம், 23, க.பரமத்தி, 90, குளித்தலை, 1, தோகைமலை, 1, கிருஷ்ணராயபுரம், 61, மாயனூர், 64, பஞ்சப்பட்டி, 15.2, கடவூர், 4, பாலவிடுதி, 8.1, மயிலம்பட்டி, 12 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 29.78 மி.மீ., பதிவானது.

அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 399 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 48.03 அடியாக இருந்தது. வாய்க்கால் மூலம், ஏழு கன அடி தண்ணீர் வெளியேறியது.

மாயனூர் கதவணை நிலவரம்: மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 11 ஆயிரத்து எட்டு கன அடி தண்ணீர் வந்தது. காவிரியாற்றில் குறுவை சாகுபடிக்காக, 10 ஆயிரத்து, 588 கன அடி தண்ணீரும், இரண்டு பாசன வாய்க்காலில், 420 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X