பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்: பொதுமக்களுக்கு அமைச்சர் அறிவுரை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கரூர்: ''தமிழக அரசு கூறி வரும் விதிமுறைகள், கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.


தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், தனிநபர் தொழில் முனைவோருக்கு, கொரோனா சிறப்பு நிதி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அன்பழகன் தலைமையில், வாங்கல் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது. பயனாளிகளுக்கு சிறப்பு நிதி வழங்கி, போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பேசியதாவது: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, 50 பேருக்கு ஒரு நபர் என்ற அடிப்படையில், கண்காணிப்பு பணி நடக்கிறது. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அவர் தனித்து இருக்க வேண்டும். தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில்தான், அதிகளவில் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால், மாவட்டத்தில் தொற்று குறைவாகத்தான் உள்ளது. அதை, மேலும் குறைக்க முயற்சித்து வருகிறோம். விரைவில் கொரோனா வைரசுக்கான, தடுப்பு மருந்து வந்து விடும் என, சொல்லி வருகின்றனர். அதுவரை, தமிழக அரசு கூறி வரும் விதிமுறைகள், கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டால், வி.ஏ.ஓ.,வுக்கு தகவல் தர வேண்டும். ஊரடங்கு காலத்தில், தொழில் வளர்ச்சிக்காக முதல்வர் பழனிசாமி நிதியுதவியை அறிவித்துள்ளார். அதன்படி, கரூர் மாவட்டத்தில், 270 பயனாளிகளுக்கு, 75 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார். மாவட்ட பஞ்., துணைத் தலைவர் தானேஷ் முத்துகுமார், கரூர் பஞ்., யூனியன் தலைவர் பாலமுருகன், மாவட்ட கவுன்சிலர் திருவிகா உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X