பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட பஞ்., யூனியன் ஆலோசனை கூட்டம்: தீர்மானங்கள் நிறைவேற்றம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் மாவட்ட பஞ்., யூனியன் ஆலோசனை கூட்டம், தலைவர் கண்ணதாசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

திருவிகா (அ.தி.மு.க.,): கடந்த, நான்கு ஆண்டுகளில், அ.தி.மு.க., அரசின் சார்பில் செய்யப்பட்ட சாதனைகள் குறித்து, மாவட்ட எல்லைகளில் சாதனை வரவேற்பு பலகைகள் அமைக்க வேண்டும். அதை, சிறப்பு நிதி பெற்று மாவட்ட பஞ்., நிர்வாகம் சார்பில் வைக்க வேண்டும்.


கார்த்திக் (தி.மு.க.,): பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான சாலை, குடிநீர், மின்சாரம், தெரு விளக்கு அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட பஞ்., அலுவலகத்தில் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.


தானேஷ் முத்துகுமார் (துணைத்தலைவர்): காவிரியாற்றின் குறுக்கே புகளூரில், 440 கோடி ரூபாய் புதிய கதவணை கட்டவும், கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க, போக்கு வரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து, கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்துக்கு மின்சாதன பொருட்கள் வாங்கியது, கணினி இயக்குபவர்களுக்கு சம்பளம் வழங்கியது, தொலைபேசி கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக, நிதி ஒதுக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அலுவலக செயலாளர் தனசேகரன் உள்பட, 12 மாவட்ட கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X