பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி வெள்ளி: பக்தர்கள் வழிபாடு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கரூர்: ஆடி வெள்ளி என்பதால், கரூரில் பூட்டப்பட்டிருந்த கோவிலுக்கு வெளியே நின்று, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வரும், 31 வரை ஊரடங்கு உத்தரவு, பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிராம பஞ்சாயத்து பகுதிகளில், 10 ஆயிரம் ரூபாய்க்குள் வருமானம் உள்ள கோவில்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று, இரண்டாவது வெள்ளி என்பதால், பக்தர்கள் கரூர் நகரப்பகுதிகளில், பூட்டப்பட்டிருந்த கோவில்களுக்கு முன்னால் நின்று சுவாமியை வழிபட்டனர். காலை, 6:00 மணி முதல், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில், காளியம்மன் கோவில் முன், பக்தர்கள் பயபக்தியுடன் சென்று சுவாமியை வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X