பிராணிகள் மீது தாக்குதல்: விவசாயி அதிர்ச்சி| Dinamalar

பிராணிகள் மீது தாக்குதல்: விவசாயி அதிர்ச்சி

Added : ஜூலை 25, 2020 | |
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, வளர்ப்பு பிராணிகளை மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி காயப்படுத்தி வருவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரவக்குறிச்சி அருகே, வடகம்பாடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 50; விவசாயி. இவருக்கு புங்கம்பாடி அருகிலுள்ள கொளிஞ்சிவாடி கிராமத்தில் தோட்டம் உள்ளது. நேற்று, அங்கு சென்ற போது அங்கு வளர்த்து வந்த ஆடு ஒன்று காயங்களுடன் இறந்து

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, வளர்ப்பு பிராணிகளை மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி காயப்படுத்தி வருவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரவக்குறிச்சி அருகே, வடகம்பாடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 50; விவசாயி. இவருக்கு புங்கம்பாடி அருகிலுள்ள கொளிஞ்சிவாடி கிராமத்தில் தோட்டம் உள்ளது. நேற்று, அங்கு சென்ற போது அங்கு வளர்த்து வந்த ஆடு ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்தது. மாடு, நாய் போன்ற வளர்ப்பு பிராணிகள் வெட்டுக்காயங்களுடன் காணப்பட்டன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி, அரவக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். வளர்ப்பு பிராணிகளை காயப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X