கோவக்குளம் ஏரியில் முட்செடிகள் அதிகரிப்பு| Dinamalar

கோவக்குளம் ஏரியில் முட்செடிகள் அதிகரிப்பு

Added : ஜூலை 25, 2020
Share

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, கோவக்குளம் பகுதியில் மழை நீர் சேமிக்கும் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வரும் மழைநீரால், அந்த பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்தது. தற்போது, ஏரியில் அதிகமான முட்செடிகள் வளர்ந்து வருகின்றன. அதானால், மழைநீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. முட்செடிகளை வெட்டி அகற்ற, பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X