குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்; கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில், பல இடங்களில் குழாய் உடைந்து, குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது.


விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் நகராட்சியில், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. அதற்காக, காவிரியாற்றில், வாங்கல், கட்டளை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீரேற்று நிலையங்கள் மூலம், தண்ணீர் மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பிறகு, குழாய் மூலம் பொது குழாய் மற்றும் வீடுகள், வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட இணைப்புகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. பழைய கரூர் நகராட்சி, பழைய தான்தோன்றிமலை நகராட்சி பகுதிகளில் புதிய குடிநீர் திட்டப்பணி நிறைவு பெற்றுள்ளது. இனாம் கரூரில், பணி நிறைவு பெறாமல் உள்ளது. கடந்த சில நாட்களாக, நகராட்சியில் பல இடங்களில் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. குறைந்தபட்சம், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படும் நாட்களில் மட்டும், தண்ணீர் சாலையில் செல்வதால், நகராட்சி அதிகாரிகள் குழாய் உடைப்பை கண்டு கொள்வது இல்லை. நேற்று முன்தினம் இரவு, 80 அடி சாலையில் குழாய் உடைப்பால், தண்ணீர் பலமணி நேரம் வீணாக சாலையில் ஆறு போல ஓடியது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, நகராட்சி கவுன்சிலர்கள் பதவியில் இல்லை. குறைகளை நகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கும்படி, பழைய கவுன்சிலர்களே கூறுகின்றனர். ஆனால், நகராட்சி அலுவலகத்தில், புகார் கூற சென்றால், ஊழியர்கள் கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி, உள்ளே விட மறுக்கின்றனர். இதனால், குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறுவதை கூட தடுக்க முடியவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X