பொது செய்தி

தமிழ்நாடு

குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் சரணாலயம்: செங்கோட்டையன்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கோபி: ''குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில், பறவைகள் சரணாலயம் உருவாக்கப்படும்,''என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொங்கர்பா ளையத்தில், 44 பயனாளிகளுக்கு, கறவை மாடு வளர்ப்பு கடனுதவியை வழங்கிய, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: குண்டேரிப்பள்ளம் அணை பகுதிகளில், இரு இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு தடுப்பணை கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அணைக்கும் செல்லும், பிரதான சாலையை புதுப்பிக்க, அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் தங்கி, சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க வழிவகை செய்யப்படும். இந்த அணைக்கு யானைகள் உள்ளிட்ட விலங்குகள் விஜயம் செய்வதை, பைனாகுலர் வசதி ஏற்படுத்தப்படும். வனத்துறை, பொதுப்பணித்துறை மூலம், குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில், பறவைகள் சரணாலயம், மிக விரைவில் உருவாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X