பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன திட்டம்: மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

நாமக்கல்: பிரதம மந்திரியின நுண்ணீர் பாசன திட்டத்தில், நடப்பு ஆண்டில், விவசாயிகள் சொட்டு நீர், தெளிப்பு நீர், மழைத்தூவான் போன்ற பாசன அமைப்புகள் அமைக்க, வேளாண்மைத்துறை மூலம் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. கரும்பு, மக்காச்சோளம், தென்னை, பருத்தி, எண்ணெய் வித்து பயிர்கள், பயறு வகை பயிர்கள் மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், இத்திட்டத்தில் பயன் பெறலாம். நாமக்கல் வட்டாரத்தில், அனைத்து வருவாய் கிராமங்களிலும், இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியம், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், நுண்ணீர் பாசனத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு, துணை நீர் நிலை மேலாண் திட்டத்தில், பாசன குழாய்கள் கொள்முதல் செய்ய அதிகபட்சம், 10 ஆயிரம் ரூபாய், மின் மோட்டார் அல்லது டீசல் பம்ப்செட் அமைக்க அதிகபட்சம், 15 ஆயிரம் ரூபாய். பாதுகாக்கப்பட்ட வேலிக்குட்பட்ட தரை நிலை நீர்த்தேக்க தொட்டி அல்லது செங்கல் கட்டுமானத்தில் தொட்டி அமைத்துக்கொள்ள, 40 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு, நாமக்கல் வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, உதவி இயக்குனர் அன்புச்செல்வி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X