குமாரபாளையம் ஜி.ஹெச்.,ல் வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்படுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குமாரபாளையம் ஜி.ஹெச்.,ல் வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்படுமா?

Added : ஜூலை 25, 2020
Share

குமாரபாளையம்: 'குமாரபாளையம் அரசு மருத்துவ மனையில், டீ உள்ளிட்ட வியாபாரிகள் நுழைய தடை விதிக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.


குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என, இரு வார்டுகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு வரும் முன் இந்த மருத்துவமனையில் டீ, இட்லி, தக்காளி, தயிர் சாதம், பழங்கள் விற்போர் என பல தரப்பட்ட வியாபாரிகள் மருத்துவமனை வளாகத்தில் வந்து வியாபாரம் செய்து வந்தனர். தற்போது, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அரசு மருத்துவமனை நுழைவுப்பகுதியில் ஊழியர்கள் யாரும் இல்லாததால், டீ உள்ளிட்ட சில வியாபாரிகள் வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாக அறிவிக்கப்பட்ட பின்பும் வியாபாரிகள் தங்கள் இஷ்டம் போல் மருத்துவமனை வளாகத்தில் வந்து செல்வது இந்த சூழ்நிலையில் விபரீதத்தை ஏற்படுத்துவதாக அமையும். ஆகவே, ஊரடங்கு இல்லாத நிலை வரும் வரை வியாபாரிகள், இங்கு வந்து வியாபாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X