சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் மரங்கள் வெட்டி சாய்ப்பு; தலைமையாசிரியருக்கு 'மெமோ'

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

எருமப்பட்டி: எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி துவக்கப் பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில், தேக்கு, வேம்பு என, 20க்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தன. கடந்த, 18ல், எட்டு தேக்கு மரம், மூன்று வேப்ப மரம் வெட்டப்பட்டு, லாரியில் எடுத்து செல்லப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு, ஒரு லட்சம் ரூபாய் என, கூறப்படுகிறது. தகவலறிந்த கல்வி துறை அதிகாரிகள், வருவாய் துறையினர், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், வட்டார கல்வி அலுவலர், வருவாய் துறையினர் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் மூலம் பெறப்பட்ட அறிக்கை அடிப்படையில், மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்ட விவகாரத்தில், தலைமையாசிரியர் ஆரோக்கிய சவுந்தரிராஜூக்கு, '17பி' சார்ஜ் மெமோவை, மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X