மேம்பாலத்தின் கீழ் பகுதியில் குப்பை எரிப்பதால் பாதிப்பு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல், ரயில்வே மேம்பாலம் அருகே, குப்பையை எரிப்பதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. நாமக்கல்-திருச்சி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. அங்கு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தனியார் பள்ளிகள், காவேரி நகர், அழகு நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இரண்டாம் பகுதி, சமுதாய கூடம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. அப்பகுதி நாமக்கல் நகராட்சி நிர்வாகத்தின் 34வது வார்டு பகுதியாகும். அங்கு 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், அந்த ரயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் நகராட்சியின் பல்வேறு பகுதியில் சேகரிக்கும் குப்பையை கொட்டி, மட்கும், மட்காத குப்பை என, பிரிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு பிரிக்கப்பட்டு கொசவம்பட்டி குப்பை கிடங்கிற்கு எடுத்துச்செல்லப்பட்ட குப்பையின் மீதி, மேம்பாலத்தின் கீழேயே குவிக்கப்படுகிறது. அவை, அவ்வப்போது எரிக்கப்படுகிறது. அதிலிருந்து எழும் கரும்புகையால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து நடக்கும் வகையில் உள்ளது. எனவே, ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் குப்பை சேகரிக்க தடைவிதிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X