பொது செய்தி

தமிழ்நாடு

அபராதத்தில் ‛‛ஆடித்தள்ளுபடி'': நடிகர்களுக்கு வனத்துறையின் கரிசனம்

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (43)
Share
Advertisement
கொடைக்கானல் : பேரிஜம் ஏரியில் மீன்பிடித்த இளைஞர்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்த வனத்துறை, ஊரடங்கில் 'இ-பாஸ்' இன்றி வந்து மீன்பிடித்த நடிகர்களுக்கு ரூ.2 ஆயிரம் மட்டும் அபராதம் விதித்து கரிசனம் காட்டியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் ஜூலை 17ல் சட்டவிரோதமாக நுழைந்து நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் திரைத்துறை பிரபலங்களுடன் மீன் பிடித்தனர்.
tamil nadu, tamil actors, vimal, soori, Kodaikanal forest,
நடிகர் விமல், நடிகர் சூரி, விமல், சூரி, புரோட்டா சூரி, அபராதம், வனத்துறை, கரிசனம்,

கொடைக்கானல் : பேரிஜம் ஏரியில் மீன்பிடித்த இளைஞர்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்த வனத்துறை, ஊரடங்கில் 'இ-பாஸ்' இன்றி வந்து மீன்பிடித்த நடிகர்களுக்கு ரூ.2 ஆயிரம் மட்டும் அபராதம் விதித்து கரிசனம் காட்டியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் ஜூலை 17ல் சட்டவிரோதமாக நுழைந்து நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் திரைத்துறை பிரபலங்களுடன் மீன் பிடித்தனர். புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானது. விமல், சூரிக்கு வனத்துறையினர் தலா ரூ.2 ஆயிரத்தை அபராதமாக விதித்தனர். சூழல் காவலர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். சில மாதங்களுக்கு முன் பேரிஜம் ஏரியில் மீன் பிடித்த இளைஞர்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


latest tamil newsஆனால் நடிகர்களிடம் தலா ரூ.2 ஆயிரம் மட்டுமே அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நடிகர்களுக்கு காங்., முன்னாள் எம்.பி.,யின் வாரிசுகள் உதவி செய்துள்ளனர். அவர்கள் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் பேரிஜம் வனப்பகுதியில் மான் வேட்டையாடி அது காட்டுக்கோழியாக சித்தரிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள்.'இ-பாஸ்' இன்றி சுற்றுலா நகருக்குள் அத்துமீறிய நடிகர்கள் மீது, ஊரடங்கு மீறல், நோய் தொற்று பரப்புவது போன்ற பிரிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


latest tamil newsஇதுகுறித்து ஆர்.டி.ஓ., சிவக்குமார் கூறுகையில், ''நடிகர்கள் வந்தது தொடர்பாக வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடி கேமரா பதிவு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் நபர்கள் உதவியுடன் வந்துள்ளனர். தொடர் விசாரணைக்கு பின்பு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

இதற்கிடையே, சம்பந்தபட்டவர்கள் மீது பேரிடர் மேலாண் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.டி.ஓ., சிவக்குமார், டி.எஸ்.பி., ஆத்மநாதனுக்கு நேற்று இரவு கடிதம் எழுதினார்.

இதுபற்றி ஆத்மநாதன் கூறுகையில், 'வனத்துறையினர் ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். மேலும் முகாந்திரம் அடிப்படையில் பிற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும்' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
27-ஜூலை-202005:37:36 IST Report Abuse
meenakshisundaram ரஜினிக்கு வெறும் நூறு ரூபா தான் அபராதம் ?அது இன்னா டிஸ்கோவுண்ட்?
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
27-ஜூலை-202004:06:51 IST Report Abuse
naadodi கேவலம்... வெட்கக்கேடு.. ஆக இந்தியாவில ஒரு நடிகரோ, அரசியல்வாதியோ தான் இயங்க முடியும் ..
Rate this:
Cancel
ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) இதனால் தான் ஏழைகளை பொறுத்தவரையில் இந்தியா இன்றும் சுதந்திரம் அடையாத நாடு என்கின்றனர் ஏழைகள். பணக்காரர்களுக்கு மட்டுமே சுதந்திரம் சென்று சேர்ந்துள்ளது [மீன் பிடித்தால் இரண்டு ஆயிரம் மட்டும் அபராதம் அதே ஏழைகள் என்றால் நாப்பதாயிரம் அபராதம், ரஜினிக்கு(பேரிடர் காலத்தில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஒட்டியதற்கு வாகனத்தை பறிமுதல் செய்யாமல் ரூபாய் நூறு மட்டும் அபராதம் ஆனால் ஏழைகளிடம் வண்டியை பிடுங்கி வைத்துக்கொள்வது மற்றும் வாக்கிங் போக ஈ-பாஸ் வழங்கியது இலைகளால் ஆத்திர அவசரத்திற்கு கூட ஈ-பாஸ் வாங்க முடியவில்லை உடனடி ரிஜெக்ட்). இது எல்லாமே ஒரு சில அரசு ஊழியர்களின் தவறுகளின் முன் உதாரணங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X