ராஜஸ்தான் அரசை கவிழ்க்க சதி செய்யும் பாஜ.,: ராகுல் குற்றச்சாட்டு

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Rahul, Rajasthan, BJP, rahul gandhi, politics,
 ராகுல், காங்கிரஸ், ராஜஸ்தான், பாஜ, பாஜக, அரசு, கவிழ்க்க, சதி, குற்றச்சாட்டு

புதுடில்லி: ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜ., சதி செய்வதாக காங்., எம்பி., ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இதற்கிடையே இரு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 ஆதரவு எம்எல்ஏ.,க்கள் கலந்துகொள்ளவில்லை. இதனைக் காரணம் காட்டி, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், காங்., தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. மேலும், அவர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக மாநில சட்டசபைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸும் வழங்கினார்.


latest tamil news


இதனை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதில், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ.,க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும், இந்த வழக்கில் மத்திய அரசை ஒரு தரப்பாக சேர்க்கவும் அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


latest tamil news


இது தொடர்பாக காங்., எம்பி ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சட்டம் மற்றும் அரசியல் அமைப்பின்படி நாட்டில் ஆட்சி நடக்கிறது. மக்கள் உத்தரவுப்படி பெரும்பான்மை அடிப்படையிலேயே அரசுகள் அமைக்கப்பட்டு ஆட்சி செய்கின்றன. ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜ., சதி செய்வது தெளிவாகியுள்ளது. இது, ராஜஸ்தானில் வசிக்கும் 8 கோடி மக்களையும் அக்கட்சி அவமதிப்பதாகும். கவர்னர் கண்டிப்பாக சட்டசபையை கூட்ட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நாட்டு மக்கள் மத்தியில் உண்மை வெளியாகும், இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Minku Pinku - coimbatore,இந்தியா
25-ஜூலை-202019:26:27 IST Report Abuse
Minku Pinku தநாள் முடியாதவனுக்கு , பககத்து வீட்டுட்டு கரண் பார்த்து பொறாமை
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-ஜூலை-202017:52:08 IST Report Abuse
J.V. Iyer பாப்புவை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இன்னும் விடலைப்பையனாகவே இருக்கிறார். என்றுதான் வளர்வாரோ? கடவுளே
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
25-ஜூலை-202016:00:01 IST Report Abuse
Siva நீங்கள் ஜாமீனில் வெளியே இருக்கும் ஒரு நபர்.. உங்கள் கேஸ் என்ன ஆனது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X