பொது செய்தி

தமிழ்நாடு

நில அளவை, வரைபடம் கட்டணம் திடீர் உயர்வு

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
நிலஅளவை, வரைபடம், கட்டணம், உயர்வு

சென்னை: நில அளவை, உட்பிரிவு செய்தல், எல்லை வரைபட பிரதிகள் பெறுவது தொடர்பான, 14 வகை கட்டணங்களை உயர்த்தி, வருவாய் துறை உத்தரவிட்டுள்ளது.

இத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ள உத்தரவு: எப்.எம்.பி., எனப்படும், புலப்பட புத்தக பிரதியில், ஒரு பக்கத்துக்கு, 20 ரூபாய் என்று இருந்த கட்டணம், 50 மற்றும் 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நிலத்தின் பக்க எல்லைகளை சுட்டிக்காட்டுவதற்கான கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோணமானி வைத்து, நிலத்தின் பக்க எல்லைகளை அளந்து காட்டுவதற்கான கட்டணம், 30 ரூபாயில் இருந்து, 300 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நில அளவரின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டில், ஒரு பக்க எல்லைக்கான கட்டணம், 50 ரூபாயாக இருந்தது; 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


latest tamil news


உட்பிரிவு, பாகப் பிரிவினைக்கு முன், நில அளவை செய்வதற்கான புதிய கட்டணம், புன்செய் நிலத்துக்கு, 1,000 ரூபாயாகவும், நன்செய் நிலத்துக்கு, 2,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம், கிராமப்புறம், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் முறையே, 400, 500, 600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, 85 ரூபாயாக உள்ள கிராம வரைபட பிரதி கட்டணம், 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amuthan - kanyakumari,இந்தியா
25-ஜூலை-202018:47:55 IST Report Abuse
amuthan இதனால் சர்வேயர் கட்டணம் பல மடங்கு உயருமே
Rate this:
Cancel
Ravi - Danbury,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-202017:31:51 IST Report Abuse
Ravi சில கட்டணங்கள் பத்து மடங்கு அதாவது 1000% அநியாய உயர்வு - எதிலுமே ஓர் நியாயமில்லை எல்லாத்துக்குமே போராட வேண்டியுள்ளது - அரசாங்கம் மக்களாட்சி - மக்களுக்கு நியாயமாக நடப்பதில்லை
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
25-ஜூலை-202015:55:12 IST Report Abuse
M.COM.N.K.K. கொஞ்சம் பாத்து போடுங்கய்யா நீங்க நல்லாஇருப்பிங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X