பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
coronavirus, covid 19, tamil nadu, tamil nadu covid 19, கொரோனா, மாவட்டங்கள், விருதுநகர், திருநெல்வேலி, நெல்லை,

சென்னை: தமிழகத்தில் சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

விருதுநகரில் 3 அரசு டாக்டர்கள், இஎஸ்ஐ மருத்துவமனை ஊழியர்கள் 9 பேர் உட்பட 216 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5570 ஆக அதிகரித்துள்ளது. 2,947 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 2580 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

நெல்லையில் மேலும் 176 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,563 ஆக உயர்ந்துள்ளது. 1,459 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 1,909 பேர் குணமடைந்துள்ளனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு 4,952 ஆக அதிகரித்துள்ளது. 3,793 பேர் குணமடைந்துள்ளனர். 1,119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news


தேனியில் மேலும், 171 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு 3,232 ஆக அதிகரித்துள்ளது

புதுக்கோட்டையில் மேலும் 98 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிப்பு 1,492 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் மேலும் 271 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது

மதுரையில் மேலும் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 393 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,701 ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 387 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,395 ஆனது. 6,691 பேர் குணமடைந்துள்ளனர். 4,124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் மேலும் 432 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 6,793 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் நகராட்சி பகுதியில் 189 பேருக்கு கொரோனா உறுதியானது.

விருதுநகரில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கட்டுப்படுத்தப்பட்ட 166 பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.



சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்தனர். அரசு ஓமந்தூரார் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தலா 2 பேரும் ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
26-ஜூலை-202008:22:14 IST Report Abuse
Muguntharajan சென்னையில லாக்டவுன் இருக்கு. அதனால பாதிப்பு குறைவு. மற்ற மாவட்டங்களில் லாக்டவுன் இல்லை. அதனால் அதிகரிப்பு. தமிழகம் முழுவதும் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு செய்தால் தான் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால் பாதிப்பு குறைய பல மாதங்கள் ஆகலாம்.
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
25-ஜூலை-202019:22:01 IST Report Abuse
 Sri,India டாஸ்மாக் பாரு ....கோரோனோ ஜோரு . மக்களை மதுக்கடையில் கூட விட்டு நோயை அதிகரிக்கும் கொடூரம் வேறு எந்த நாட்டிலும் நடக்காத ஒன்று .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X