பீஹார் வெள்ளம் - 18 பேர் பலி; 10 லட்சம் மக்கள் தவிப்பு!

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Bihar Floods, flood, bihar, பீஹார், வெள்ளம், பலி, மக்கள், தவிப்பு

பாட்னா: பீஹாரில் பெய்த கனமழையால் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர், வட மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

பீஹார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு இடங்களில் கரைகளை உடைத்துக் கொண்டு வெள்ள நீர் கிராமங்களை சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகுதான் பழுதுபார்ப்பு பணிகள் மீண்டும் தொடங்கும் என்று மாநில அரசு கூறியுள்ளது.


latest tamil news


நேபாள எல்லையில் அமைந்துள்ள மேற்கு சம்பாரன் மாவட்டம் வழியாக கந்தக் நதி பாய்கிறது. தற்போது இந்த நதியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள நீர் செல்கிறது. இதனால் மாவட்டத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 1.43 லட்சம் பேர் இங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த அணியினர் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர். சுபால், கிஷன்கஞ்ச், முசாபர்பூர், கோபால்கஞ்ச் மற்றும் ககாரியா போன்ற வட மாவட்டங்களை சேர்ந்த 9.46 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


தேசிய பேரிடர் மீட்பு படையின் 22 குழுக்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் இதுவரை 93.89 லட்சம் பேரை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். அவர்களில் 12,000-க்கும் மேற்பட்டோர் 22 நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும், சுமார் 1.15 லட்சம் பேருக்கு உணவு வழங்க 271 சமூக சமையற்கூடங்கள் இயங்கி வருகின்றன. நிவாரண பொருட்கள் வழங்க முடியாத இடங்களுக்கு செல்ல இந்திய விமான படையின் உதவியை நாடியுள்ளோம். இவ்வாறு மாநில பேரிடர் மேலாண்மை துறை கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
25-ஜூலை-202017:24:56 IST Report Abuse
S.P. Barucha பீஹார் வெள்ளம் , நேபாளம் ஒட்டிய சீன எல்லை பகுதியில் நிலநடுக்கத்திற்கான முன் அறிகுறி.
Rate this:
Cancel
Sami Sam - chidambaram ,இந்தியா
25-ஜூலை-202015:03:41 IST Report Abuse
Sami Sam பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் நலம் பெறவேண்டும் வெளி நாடுகள் மாநிலங்களில் அதிக அளவு மழை பெய்கிறது ஆனால் தமிழ் நாட்டில் இந்த ஆண்டு எதிர்பார்க்கும் மழை கூட கிடைக்காது என்ற தோன்றுகிறது பல வருடங்களில் இது போல வெளி மாநிலங்கள் நாடுகள் கடுமையான மழை வெள்ளத்தை சந்தித்த போது தமிழ் நாட்டில் வறட்சியை நிலவியது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X