ஒளி ஒவியர் அனூப் உபாசனா.

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020
Share
Advertisement



latest tamil news


நீலகிரி மாவட்டம் பந்தலுார் பகுதியைச் சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் அனுாப் உபாசனா, தற்போது கேரளா மாநிலம் கொச்சியில் பேஷன் போட்டோகிராபராக இருக்கிறார்.



latest tamil news



போட்டோகிராபியில் கடினமான விஷயம் ஒளி ஒவியம் வரைவது. கேமிராவை டிரைபாடில் பொருத்திவிட்டு ஷட்டரை பதினைந்தில் இருந்து முப்பது வினாடி வரை திறந்து மூடும்படி கட்டளையிட்டுவிட்டு அந்த சில வினாடி நேரத்தில் காற்றில் மெல்லிய டார்ச் லைட் கொண்டு ஒவியம் வரைந்து முடிக்க வேண்டும் இந்த ஒவியம் கேமிராவின் சென்சார் போர்டில் மட்டுமே பதிவாகும்.


latest tamil news


Advertisement


பதிவான இந்த ஒளி ஒவியத்தை பின் பிரிண்ட் வடிவத்திலோ அல்லது வேண்டிய டிஜிட்டல் வடிவத்தில் பார்த்து மகிழலாம்.அந்த சில வினாடி நேரத்தில் காற்றில் தான் கற்பனை செய்த ஒவியத்தை சரியான இடத்தில் ஆரம்பித்து சரியான இடத்தில் முடிப்பதில்தான் நேர்த்தியும் திறமையும் இருக்கிறது.


latest tamil news



மிகவும் பொறுமை தேவைப்படுவதால் இந்த கலை வடிவத்தை பெரும்பாலானவர்கள் முயற்சிப்பது இல்லை ஏன் நாம் முயற்சிக்ககூடாது என்று முடிவு செய்து அனுாப் கடந்த சில வருடங்களாக ஒய்வு கிடைக்கும் போதெல்லாம் இதில் பயிற்சியும் முயற்சியும் செய்து வந்தார்.


latest tamil news



இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து மறுநாள் காலை 4 மணி வரையிலும் கூட பயிற்சி செய்து இருக்கிறார்.இந்த வகை படங்களுக்கான போட்டி சமீபத்தில் கேரளாவில் நடந்தது.அதில் இவர் வரைந்த காந்தி படத்திற்கு பரிசு கிடைத்துள்ளது.இன்னும் இதில் நிறைய புதுமைகளை மேற்கொண்டு பின்னர் இந்த வகை படங்களைக் கொண்டு புகைப்பட கண்காட்சி நடத்தவேண்டும் என்பதுதான் என் எதிர்கால் ஆசை என்று சொல்லும் அனுாப்பிடம் பேசுவதற்கான எண்:99955 73939.


latest tamil news



தகவல்:பந்தலுார் ராஜேந்திரன்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X