பொது செய்தி

இந்தியா

30 நொடிகளில் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை 'கிட்' கண்டுபிடிக்க திட்டம்

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
India, israel, coronavirus, covid 19, rapid test kit, இந்தியா, இஸ்ரேல், பரிசோதனை, கிட், 30 நொடிகள்

புதுடில்லி: இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து வெறும் 30 நொடிகளில் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை கிட் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றால் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை கண்டறிய கருவிகள் இருந்தாலும், அதன் முடிவுகள் வர கால தாமதம் ஏற்படுகிறது. மேலும், பரிசோதனைக்கான செலவும் அதிகமாக உள்ளது. இந்த கவலையை போக்க இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து புதிய பரிசோதனை கிட்டை கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளது. ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (ஏஐ) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 30 நொடிகளுக்குள் வைரசை கண்டறியும் வகையில் இந்த கிட் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.


latest tamil news


கிட் கண்டறியும் பணிகள் இந்தியாவில் நடைபெறும் எனவும், ஆராய்ச்சியில் வெற்றி கிடைத்தால், கருவிகள் தயாரிப்பும் இந்தியாவிலேயே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருவிகள் தயாரிப்புக்கு பிறகு இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து உலகம் முழுவதும் விற்பனை செய்யும். இதற்காக இஸ்ரேல் பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அடுத்த வாரம் சிறப்பு விமானத்தில் இந்தியா வருகின்றனர்.


latest tamil news


இஸ்ரேல் ஆராய்ச்சி குழுவினர் பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டாக்டர் கே.விஜயராகவன் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினருடன் இணைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் 2 வாரங்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளனர். இந்த பரிசோதனை கிட், பயன்படுத்தி வீட்டிலேயே பரிசோதனை செய்து 30 நொடிக்குள் தொற்றை அறியலாம். இந்த கருவி மூலம் ஒருவருக்கு பரிசோதனை செய்ய 10 டாலருக்கும் குறைவாகவே செலவாகும் எனவும், இது ஆய்வுக்கூடங்களில் நடத்தப்படும் பரிசோதனைக்கான செலவில் ஒரு சிறு தொகைதான் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-ஜூலை-202001:27:33 IST Report Abuse
தமிழ்வேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வாசம், ருசி குறைந்தோ, இல்லாமலோ போய்விடுவதும் ஒரு அறிகுறி. இதை வைத்து கொரோனா தொற்றை சில வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும். பிரஞ்சி நாட்டில் சில வாடையை (யூகலிப்டஸ் தைலம்......... etc ) மெல்லிய (பேப்பர் போல) அட்டைகளில் ஏற்றி சுவாசிக்க வைக்கப் படுகின்றது. அந்த வாடை தெரியவில்லை என்றால் தொற்று அறிகுறிக்கு ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. அதற்குமுன் அதே வாடையை அதிக டோஸில் சுவாசிக்க வைக்கின்றனர். அந்த நெடியும் தெரியவில்லை என்றால் அதன் பிறகு வேறு டெஸ்டிற்கு பரிந்துரைக்கின்றனர். இதுபோல நாமும் செய்யலாம்.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
25-ஜூலை-202018:10:50 IST Report Abuse
பாமரன் ஒரு மணி நேரத்தில் டெஸ்ட் செய்து ரிசல்ட் தெரிவிக்கும் உபககரணத்தை ஐஐடி கரக்பூர் வெளியிட்டது. இதன் விலையும் குறைவு. நானூறு ரூபாய்தான். பெங்காலில் உபயோகத்தில் வருது. மத்திய அரசின் உதவி கேட்கப்பட்டுள்ளது...
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
25-ஜூலை-202021:55:50 IST Report Abuse
தல புராணம்தேர்தல் நிதி பத்திரம் எத்தனை கோடி தருவாங்க?...
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
25-ஜூலை-202016:42:57 IST Report Abuse
S. Narayanan ரொம்ப நன்றி. அப்படியே கொரோனாவை முப்பது நொடிகளில் விரட்டவும் ஒரு கருவி கண்டுபிடிங்க
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
25-ஜூலை-202021:56:11 IST Report Abuse
தல புராணம்குத்து விளக்கு?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X