ஹாரி - மேகன் தம்பதி வழக்கு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

லாஸ் ஏஞ்சலஸ்: பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேரன் ஹாரி, தன் மனைவி மேகன் மார்க்கலுடன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார். இதற்கிடையே, அவர்களின் குழந்தை ஆர்ச்சியின் புகைப்படம் ஒன்று, சமீபத்தில் ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில், தங்கள் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடுவதற்கு தடை கோரி, ஹாரி - மேகன் தம்பதியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த புகைப்படம், லாஸ் ஏஞ்சலசில் உள்ள தங்கள் வீட்டில் எடுக்கப்பட்டதாகவும், தனியுரிமையை மீறி, இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X