பொது செய்தி

இந்தியா

கேரளா, கர்நாடகாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா எச்சரிக்கை

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
ISIS, Terrorists, Kerala, Karnataka, UN, report, ஐஎஸ், பயங்கரவாதிகள், கேரளா, கர்நாடகா

புதுடில்லி: கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ், அல்கொய்தா மற்றும் அது தொடர்பான பயங்கரவாதிகள் குறித்த ஐ.நா.,வின் பயங்கரவாத கண்காணிப்பு மற்றும் தடை குறித்த 26வது அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அல்கொய்தா தீவிரவாத அமைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில் ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ், ஹெல்மாண்ட், காந்தகர் மாகாணங்களில் இருந்து செயல்பட்டு வருகிறது. வங்கதேசம், இந்தியா, மியான்மர், பாகிஸ்தான் நாடுகளில் 150 முதல் 200 அல்கொய்தா பயங்கரவாதிகள் வரை இருக்கக்கூடும்.


latest tamil news



அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவர் ஒசாமா மெகமூத், தனது தலைவர் ஆசிம் உமர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். ஐஎஸ்ஐஎல் அமைப்பின் இந்திய கிளை, (ஹிந்த் விலாயா), கடந்த 2019ம் ஆண்டு மே 10ல் வெளியிட்ட அறிக்கையில் 180 முதல் 200 உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவித்திருந்தது. மேலும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.


latest tamil news



கடந்தாண்டு மே மாதம் காஷ்மீரில் ராணுவத்துக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து ஐஎஸ் பயங்கரவாதிகள் (ஐஎஸ்ஐஎஸ், ஐஎஸ்ஐஎல், தாயிஷ்) இந்தியாவில் புதிய மாகாணத்தை உருவாக்கி இருக்கிறோம் எனவும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஐஎஸ் பயங்கரவாதிகள் குறித்து செய்தி வெளியிடும் அமாக் நியூஸ் ஏஜென்சியில் அந்த அமைப்பு தங்களின் புதிய கிளையின் பெயரை அரபு மொழியில் ‛விலாயா ஆப் ஹிந்த்' (இந்திய மாகாணம்) எனத் தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
25-ஜூலை-202022:00:51 IST Report Abuse
blocked user கேரளா பற்றி ஏற்கனவே தெரிந்ததுதான். கர்நாடகா புதிதாக சேர்ந்து இருக்கிறது.
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
25-ஜூலை-202020:46:58 IST Report Abuse
Raj உள்துறை. அமைச்சரவை என்ன செய்கிறது? எல்லா மாநிலங்களிலும் ஏதோ ஒரு சமூக அச்சுறுத்தல் இருக்கிறது அமைச்சரவை தயங்குகிறது
Rate this:
Cancel
IYER AMBI - mumbai,இந்தியா
25-ஜூலை-202020:43:12 IST Report Abuse
IYER AMBI அன்பு ததும்பும் மதம். அன்பை பரப்பவேண்டும் மதத்தையல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X