இந்தியாவில் ஒரே நாளில் 4. 2 லட்சம் கொரோனா பரிசோதனை| India conducts over 4.2 lakh COVID-19 tests in single day | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 4. 2 லட்சம் கொரோனா பரிசோதனை

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020
Share
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பரிசோதனையில் கடந்த 24 மணி நேரத்தில் , அதிகபட்சமாக 4.2 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 48, 916 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 13 லட்சத்தை தாண்டியது.இந்நிலையில், இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில்
india, corona in india, corona test, coronavirus test, corona india, covid19 test, labs, icmr, corona, coronavirus, covid-19, corona cases, corona update, coronavirus update, corona cases worldwide, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, coronavirus count, corona toll, corona India, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, பரிசோதனை, ஐசிஎம்ஆர், ஆய்வகம், பிரதமர்மோடி,

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பரிசோதனையில் கடந்த 24 மணி நேரத்தில் , அதிகபட்சமாக 4.2 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 48, 916 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 13 லட்சத்தை தாண்டியது.

இந்நிலையில், இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் அதிகபட்ச பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,20,898 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதனால், 10 லட்சம் பேருக்கு நடத்தப்படும் பரிசோதனையின் சராசரி 11,485 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மொத்த பரிசோதனை 1,58,49,068 ஆகவும் அதிகரித்துள்ளது என ஐ.சி.எம்.ஆர்., தெரிவித்துள்ளது.


latest tamil news

ஆய்வகங்கள் திறப்பு


இதனிடையே, ஐசிஎம்ஆர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 3 ஆய்வகங்களை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். மும்பை, கோல்கட்டா, நொய்டா ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ஆய்வகங்களை வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைக்க உள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X