சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பத்து லட்சம் ரூபாய் கையாடல்: படியூர் ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

திருப்பூர்: திருப்பூரை அடுத்த காங்கயம், பரஞ்சேர்வழி ஊராட்சியில், பத்து லட்சம் ரூபாய் கையாடல் செய்தது தணிக்கையில் தெரிந்தது. இதுதொடர்பாக, ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பரஞ்சேர்வழி ஊராட்சியில் காஞ்சனா, 45 என்பவர், கடந்த மே மாதம் வரை ஊராட்சி செயலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த மார்ச் மாதத்தில் குடிநீர் கட்டணம், சொத்துவரி உட்பட பல்வேறு பணிகளை கவனித்து வந்தார். இதுதொடர்பாக, பல்வேறு புககார் வந்ததையடுத்து, படியூர் ஊராட்சிக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து, காங்கயம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) மணிகண்டன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தரா ஆகியோர் கணக்குகளை ஆய்வு செய்தனர். அதில், காஞ்சனா, வரி வசூல் செய்து, பத்து லட்சம் ரூபாய் வங்கிக்கு செலுத்தாமல் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, காஞ்னா 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

மேலும், ஊராட்சி செயலர்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் தொடர்ந்து வருகின்றனர். இதன் காரணமாக, மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X