எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு போர்த்தியவர்கள் மோசமான விஷக்கிருமிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு போர்த்தியவர்கள் மோசமான விஷக்கிருமிகள்

Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (2)
Share

திருநெல்வேலி: எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு போர்த்தியவர்கள் கொரோனா வைரஸ் கிருமியை விட மோசமான விஷக்கிருமிகள் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் பேரூராட்சிக்குட்பட்ட புதுக்கோட்டையில் ரூ 36 லட்ச ரூபாய் மதிப்பிலான பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு போர்த்தியது சமூக விரோதிகளின் செயல்,கொரோனா வைரஸ் கிருமியை விட மோசமான விஷக்கிருமிகள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள், சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பவர்கள், மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பவர்கள் அத்தனைபேரையும் மக்கள் அடையாளம் கண்டு அவர்கள் புறந்தள்ளி தண்டிக்கப்பட வேண்டியவர்கள்,மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனாவை நாம் எதிர்கொண்டு வருகிறோம், இந்த நேரத்தில் சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள் என்றால் அவரை நிச்சயமாக சட்டத்திற்கு முன் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்,இப்படிப்பட்டவர்களே அரசு மட்டுமல்ல, மக்களும் விழிப்போடு இருந்து கண்டறிந்து அவர்களை சமூகத்தில் இருந்து புறந்தள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X