ஆன்லைன் மூலம் கல்வி கற்பவர்களுக்கு விசா கிடையாது: அமெரிக்கா

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
ஆன்லைன், வகுப்புகள், விசா, அமெரிக்கா,

வாஷிங்டன்: அமெரிக்க பல்கலைகழகங்களில் ஆன்லைன் மூலம் கல்வி கற்க புதிதாக வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கப்படாது என அமெரிக்கா அரசு தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு மட்டுமல்லாமல், கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்விகளை கற்க பெரும்பாலான மாணவர்களின் அமெரிக்காவை தேர்வு செய்கின்றனர். சீனா, இந்தியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளை சார்ந்த ஏராளமான மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி கற்பதில் முன்னிலை வகிக்கின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அங்கு தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து, அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க குடியேற்றத்துறை அறிவித்தது. இது வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமல்லாமல், பல்கலைகழகங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின. இதனை எதிர்த்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டதால், அந்த முடிவு திரும்ப பெற்று கொள்ளப்பட்டது.


latest tamil news




இந்நிலையில், அமெரிக்க பல்கலைகழகங்களுக்கு குடியேற்றத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ஆன்லைன் மூலம் படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இனிமேல் விசா வழங்கப்படாது. மார்ச்9 க்கு பின்னர் பல்கலைகழகங்களில் சேர்க்கப்படாமல் உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சேர விரும்பினால், அவர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது. ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X