சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரவில் தொடரும் மர்மநபர்கள் நடமாட்டம்: கோவை மக்கள் அச்சம்

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
கோவை, மர்மநபர்கள், நடமாட்டம், இரவு, மக்கள், அச்சம்

கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளிலும் மர்மநபர்கள் இரவில், வீடுகளை நோட்டமிடுவது தொடர்வதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் கோவை இருகூர் தீபம் நகரில் இரவு நேரத்தில் ஏழு பேர் அடங்கிய கும்பல் அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிடுவது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவை பீளமேட்டில் குடியிருப்பு பகுதிகளுக்குள் முகத்தை துணியால் மறைத்தபடி மேலாடையின்றி மூன்று மர்மநபர்கள் வீடுகளை நோட்டமிடுவது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்தது.


latest tamil news




பீளமேடு போலீசாரின் விசாரணையில் மர்மநபர்கள், அப்பகுதியில் இருந்த குடியிருப்புகளின் முன்பக்க கதவுகளை அடைத்தது தெரிந்தது. அதேபோல், அப்பகுதியில் உள்ள நான்கு வீடுகளை உடைக்க முயற்சி செய்துள்ளதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
27-ஜூலை-202018:23:16 IST Report Abuse
S. Narayanan எல்லாம் கொரோனாவின் அவலம். போலீஸ் மக்களுக்கு உண்மையாக நல்லது செய்ய நினைத்தால் இவைகளை தடுக்க முடியும்.
Rate this:
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
27-ஜூலை-202016:16:07 IST Report Abuse
S.P. Barucha மக்கள் ஒன்றாக சேர்ந்து கொள்ளையர்களின் கால ஒடிக்கணும்.
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
27-ஜூலை-202015:32:10 IST Report Abuse
M.COM.N.K.K. கண்டதும் சுட உத்தரவு போடுங்கள் அதுதான் நல்லது
Rate this:
Davamani Arumuga Gounder - Gandhipuram Sendamangalam Namakkal,இந்தியா
27-ஜூலை-202019:18:47 IST Report Abuse
Davamani Arumuga Gounderமனித உரிமைப்போராளிகள் என்ற பெயரில் உள்ள, கனிமொழி மற்றும் தி.க, தி.மு.க. வி.சி. இவர்கள் போலீஸ் அராஜகம் என்று கூப்பாடு போடுவார்களே ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X