மஹாவில் பள்ளிப்பாடங்களை 25 சதவீதம் குறைக்க மாநில கல்வித்துறை முடிவு| Maharashtra cuts syllabus for Classes 1 to 12 by 25% for academic year 2020-21 | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மஹாவில் பள்ளிப்பாடங்களை 25 சதவீதம் குறைக்க மாநில கல்வித்துறை முடிவு

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (2)
Share
மும்பை: மஹாராஷ்டிராவில் பள்ளிப்பாடங்களை 25 சதவீதம் குறைக்க மாநில பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.கொரோனா பரவும் சூழலில் நடப்புக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைத்துக் கொள்ளலாம் என மஹாராஷ்டிர கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழு தெரிவித்துள்ளது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மஹாராஷ்டிரப்
maha, education, maharashtra, school lessons, reduction, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, மஹாராஷ்டிரா, பள்ளிகல்வித்துறை, 25 சதவீதம், பாடங்கள், குறைப்பு

மும்பை: மஹாராஷ்டிராவில் பள்ளிப்பாடங்களை 25 சதவீதம் குறைக்க மாநில பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவும் சூழலில் நடப்புக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள பள்ளி பாடங்களை 25 சதவீதம் குறைத்துக் கொள்ளலாம் என மஹாராஷ்டிர கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழு தெரிவித்துள்ளது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மஹாராஷ்டிரப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்சா கெயிக்வாட் தெரிவித்துள்ளார்.


latest tamil news



மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எந்தெந்த பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள சூழ்நிலையில் ஜூன் 15ம் தேதி முதல் மாணவர்கள் கல்வி கற்பதற்கான மாற்று வழிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக வர்சா கெயிக்வாட் மேலும் தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X