சத்தீஷ்கரில் பூட்டிய அறைக்குள் மூச்சு திணறி 43 பசுமாடுகள் பலி

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement

பிலாஸ்பூர்: சத்தீஷ்கரில் பஞ்., கட்டடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 43 பசுக்கள் மூச்சுத்திணறால் பலியான சம்பவம் நடந்துள்ளது.latest tamil newsஇது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சத்தீஷ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்தது மேட்பார் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பஞ்., அலுவலக கட்டடத்தில் அக்கிராமத்தை சேர்ந்த 60 பசுக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. பூட்டப்பட்டிருந்த அறைக்குள் இருந்த பசுக்கள் மூச்சுதிணறல் காரணமாக பலியாயின.

பசுக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து வந்த துர்நாற்றத்தை அடுத்து ஊர் மக்கள் போலீசுக்கு தகவல்அளித்தனர். அதன் பின்னரே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இவ்வளவு மாடுகள் எப்போது , எதற்காக பூட்டி வைக்கப்பட்டிருந்தன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் சரண்ஷ்மிட்டார் தெரிவித்துள்ளார்.


latest tamil newsதொடர்ந்து நடைபெற்ற பிரேதபரிசோதனையில் 43 பசுக்கள் மூச்சுத்திணறி பலியாகி இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. மேலும் 17 பசுக்கள் நல்ல நிலையில் உள்ளதாக கால்நடைமருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
26-ஜூலை-202000:55:20 IST Report Abuse
rajesh தன் வாழ்நாள் முழுவதும் இந்த கேடுகெட்ட மனித ஜென்மத்திற்கு தன் சுதந்திரத்தை இழந்து ரத்தத்தை பாலாக்கி வெளியே கூறமுடியாமல் தன் சோகங்களை கண்ணீரால் வெளிப்படுத்தி ஒரு வாழ்க்கையை வாழ்ந்ததற்கு கேடுகெட்ட மனித ஜென்மம் கொடுக்கும் பரிசு மரணம்.....கண்ணீர் வருகிறது இந்த கொடுமையை படித்த பிறகு
Rate this:
Cancel
vivek c mani - Mumbai,இந்தியா
25-ஜூலை-202023:50:51 IST Report Abuse
vivek c mani வாய்பேச வழியில்லா ஜீவன்களை இப்படியும் சாகவைப்பார்களா? இதில் ஏதோ மர்மம் இருப்பதாக தெரிகிறது . இல்லாவிடில் பசுக்களை இப்படி மூச்சு திணறவைத்து எப்படி சாகடிக்க முடியும்? தீவிர விசாரணை அவசியம். கிராம மக்களுக்கு வாழ்விற்கு பெரும் ஆதாரம் பசுக்கள் என்பதை மறக்க கூடாது.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
25-ஜூலை-202022:04:59 IST Report Abuse
தல புராணம் பசு நல்லா ..சு விடும் என்பது தெரியுமா? புல், வைக்கோல் தின்பதால் "வாய்த்தொல்லை" அதிகம், அப்புறம் அதில் மீத்தேன் அதிகம்.. ரூமில் அடைத்து வைத்தால் மீத்தேன் வாயுவினால் மூச்சு அடைத்து இறந்து விட்டன..
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
26-ஜூலை-202005:32:54 IST Report Abuse
 Muruga Velபசுவோட மட்டும் தான் சகவாசமா .....
Rate this:
தியாகி சுடலை மன்றம்உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா...
Rate this:
தியாகி சுடலை மன்றம்உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா...
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
26-ஜூலை-202008:20:03 IST Report Abuse
 Muruga Velதல புராணம் கருத்துக்களை படிக்கும்போது அவற்றின் தன்மைக்கு இவர் ஆராய்ச்சிகள் தான் காரணம் போல தெரியுது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X